வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 ஜூன் 2019 (21:22 IST)

ஒவ்வொருவராக விலகுவது கட்சிக்கு நல்லதுதான்: டிடிவி தினகரன்

அமமுகவில் இருந்து ஒவ்வொருவராக விலகிச் செல்வது கட்சிக்கு நல்லதுதான் என அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும் தங்க தமிழ்ச்செல்வனை கட்சியில் இருந்து நீக்குவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டதாகவும், இனி அவர் கூறுவதற்கெல்லாம் பதில் கூற முடியாது என்றும், டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
 
 
டிடிவி தினகரனை கடுமையாக விமர்சனம் செய்தும் அவரை கட்சியில் இருந்து நீக்குவதில் தயக்கம் காட்டி வந்த தினகரன் ஒருவழியாக கட்சியில் இருந்து அவர் நீக்கப்படுவார் என்று சற்றுமுன் அறிவித்தார். இதற்கான நடவடிக்கைகளும் விரைவில் எடுக்கப்படும் என தெரிகிறது. 
 
மேலும் இதனையடுத்து தங்க தமிழ்ச்செல்வன் நீக்கப்பட்டால் அமமுகவின் கூடாரம் பெரிய அளவில் காலியாகும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் ஒவ்வொருவராக கட்சியில் இருந்து விலகினால் அதற்காக வருத்தப்பட போவதில்லை என்றும் அதுவும் ஒரு வகையில் கட்சிக்கு நல்லதே என்றும் டிடிவி தினகரன் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
 
தினகரனை நம்பி வந்த 18 எம்.எல்.ஏக்கள் பதவி இழந்ததோடு, பணத்தையும் பெருமளவு இழந்துவிட்டனர். ஏற்கனவே இந்த 18 பேர்களில் ஒருசிலர் மாற்றுக்கட்சிக்கு சென்றுவிட்ட நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் கட்சியை விட்டு சென்றால் ஒட்டுமொத்தமாக அமமுக காலியாகிவிடும் என்றே கணிக்கப்படுகிறது