1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (16:03 IST)

#மண்டியிட்டமாங்கா... டிரெண்டாகும் பாமக; வைரலாகும் மீம்ஸ்...

தமிழகத்தில் இருந்து அதிமுக, திமுக போன்ற திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும் என பேசி வந்த ராமதாஸ் இன்று அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது கேலிக்குள்ளாகியுள்ளது. 
 
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பாஜக - அதிமுக தங்களது இறுதிக்கட்ட பேச்சிவார்த்தையை எட்டியுள்ள நிலையில், அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகியுள்ளது. தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 பாராளூமன்ற தொகுதியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், ராஜ்யசபாவில் 1 சீட்டு என்ற ஒப்பந்தத்தோடு கூட்டணி உறுதியாகியுள்ளது. 
 
இந்நிலையில் இது கடும் கிண்டலுக்குள்ளாகியுள்ளது. அதோடு, டிவிட்டரில் #மண்டியிட்டமாங்கா என்ற ஹேஷ்டேக் வைரலாக்கப்பட்டு வருகிறது. கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அன்று கூறிய ராமதாஸ் இன்று அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருப்பதை கேலி செய்து பல மீம்களும் வெளியாகி வருகின்றன. அவற்றில் சில இதோ...