திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2019 (08:28 IST)

திமுக-பாஜக நடத்தும் கோலப்போட்டி: ஜெயிப்பது யார்?

குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக சமீபத்தில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளைஞர்கள் சிலர் கோலங்கள் போட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து அதே பாணியை திமுகவினரும் கடைபிடித்தனர்
 
திமுக தலைவர் முக ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி உள்பட பல திமுக பிரபலங்களின் வீடுகளில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்களுடன் கூடிய கோலங்கள் போடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
கோலங்கள் போட்டு பாஜக அரசுக்கு நெருக்கடி தருவதாக திமுகவினர்களும், இதுவரை கோலம் போடுவது மூட நம்பிக்கை என்று கூறி வந்த திமுகவினர்களை கோலம் போட வைத்தது பிரதமர் மோடி என்று பாஜகவினர்களும் இதுகுறித்து கூறி வந்தனர்.
 
இந்த நிலையில் தற்போது பாஜகவினர்களும் இந்த கோல விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். மூலப்பத்திரம் எங்கே என்ற வாசகங்களுடன் கூடிய கோலங்களை பாஜகவினர் தங்கள் வீடுகளுக்கு முன் போட்டு வருகின்றனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
 
மொத்தத்தில் திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சியினர் கோலப் போட்டி நடத்தி வருவதாகவும் இந்த கோலப் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பார்ப்போம் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்