1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: ஞாயிறு, 18 ஜனவரி 2026 (14:16 IST)

திமுகவுடன் கூட்டணி!. விஜய்க்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ்!.. நடந்தது இதுதான்!...

dmk congress
கடந்த பல வருடங்களாகவே அல்லது பல தேர்தலாகவே காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் தேர்தலை சந்தித்து வருகிறது. அதேநேரம் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு திமுக எந்த பங்கும் கொடுப்பதில்லை. அதாவது காங்கிரஸ் எம்.,எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி இதுவரை கொடுக்கப்படவில்லை.

ஆனால் தற்போது ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை காங்கிரஸில் வலுத்து வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் இரண்டாம் கட்ட தலைவர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த கருத்தை மாணிக்கம் தாகூர் எம்.பி, செல்வ பெருந்தகை, பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலரும் ஏற்கனவே பேசினார்கள், திமுகவை பொருத்தவரை ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க தயாராக இல்லை. இதில் மு.க ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.எனவே ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என கூறியுள்ள விஜயின் தவெகவுடன் கூட்டணிக்கு செல்லலாமா என காங்கிரஸ் யோசித்து வருவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் ஓடி வருகிறது.

ஏனெனில் ஜனநாயகனுகு ஆதரவாக பல காங்கிரஸ் பிரமுகர்களும் பேசினர். குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுலும் ஜனநாயகன விஷயத்தில் மோடிக்கு எதிராக டிவிட் செய்திருந்தார்.
எனவே தவெகவுடன் ராகுல் கூட்டணி அமைப்பாரா என்கிற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது. ஆனால் திமுகவிலேயே கூட்டணியை தொடரலாம் என காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக தற்போது செய்திகள் கசிந்திருக்கிறது.

யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது தொடர்பாக முடிவு எடுக்கும் ஆலோசனைக் கூட்டம் நேற்று டெல்லி நடந்தது. இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அவர்களில் 90 சதவீதம் பேர் திமுகவுடனே கூட்டணியை தொடரலாம். அதுதான் நமக்கு நல்லது.. அதுதான் வெற்றிக் கூட்டணி என்ற சொன்னதை தலைமை ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. எனவே 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று நம்பப்படுகிறது.