புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 30 டிசம்பர் 2019 (14:27 IST)

மராட்டிய மாநிலத்தில் மீண்டும் துணை முதல்வராகிறார் அஜித் பவார் ...

மராட்டியத்தில் சிவசேனா தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாடி என்ற தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை உருவாக்கி கடந்த மாதம் 28 ஆம் தேதி அம்மாநிலத்தில் ஆட்சியை பிடித்தனர். அப்போது, முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார். 
அதனைத்தொடர்ந்து 3 கட்சிகளின் சார்பில் தலா 2 பேர் என மொத்தம் 6 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
 
இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், முதலவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசினார். அப்போது, வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ள அமைச்சர விரிவாக்கத்தின்போது, முன்னர் பாஜவுக்கு ஆதவரவளித்த அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படும் என தகவல் வெளியானது.
 
இந்நிலையில், இன்று, மராட்டிய சட்டசபை விரிவாக்கம் நடைபெற்றது, அப்போது, அஜித் பவார் துணைமுதல்வராகப் பதவியேற்றார். 
 
இதையடுத்து, 36 பேர் மந்திரிகளாகப் பதவியேற்றனர். இதில், உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.