திங்கள், 3 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 30 டிசம்பர் 2019 (14:59 IST)

இப்படியே போனா எப்படி? அதிமுகவுக்கு பேரிடி!!

குடியுரிமை சட்ட திருத்தத்தை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று அதிமுக சிறுபான்மை பிரிவு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்து  அதிமுக செயல்பட்டுவருவதால் தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களின் வாக்குகளை அதிமுக இழந்து வருகிறது என அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்தத்தை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று அதிமுக சிறுபான்மை பிரிவு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு...
 
அதிமுக அரசு செயல்படுவதால் தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களின் வாக்குகளை அதிமுக இழந்து வருகிறது. இது அதிமுகவுக்கு பெரிய இழப்பாகும். பல்வேறு மாநிலங்கள் இந்த குடியுரிமை மசோதாவை அமல்படுத்த மாட்டோம் என்று கூறிவிட்டன.
 
இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் நாட்டின் இறையாண்மை மற்றும் மதசார்பின்மைக்கு பாதிப்பு வந்துவிடும். எனவே அதிமுக மத்திய அரசின் இந்த சட்டத்தை எதிர்த்தால் தற்போது நடந்து வரும் போராட்ட எதிர்ப்பு என்ற நெருப்பை அணைக்கும் தண்ணீர் போல மக்களின் மனதில் அதிமுக நீங்கா இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.