வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (13:07 IST)

மீன் சாப்பிட்டால் ஐஸ்வர்யா ராயின் கண்களைப் போல் ஜொலிக்கும்-பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

maharastra minister- aiswarya rai
மகாராஷ்டிரம்  மாநிலத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ஒருவர் தினமும் மீன் சாப்பிட்டால்  நடிகை ஐஸ்வர்யா ராயின் கண்கள் போன்ற கண்களைப் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரம் மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஹிண்டே தலைமையிலான சிவசேனா (எதிர்ப்பு அணி) பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

வடக்கு மராட்டியத்தின் நந்துர்பார் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அம்மாநில பழங்குடியின அமைச்சர் விஜய்குமார் காவித், தினமும் சாப்பிட்டு வருபவர்களுக்கு சருமம் மிருதுவாகவும், ஐஸ்வர்யா ராயின் கண்களைப் போன்ற கண்களைப் பெறலாம் என்று கூறியுள்ளார்.

மேலும், 'ஐஸ்வர்யா ராய் பெங்களூரு அருகே கடலோர நகரத்தில் வசித்து வந்தார். அவர் மீன் சாப்பிடுவது வழக்கம். அவர்கள் கண்களும் தோலும் அழகாக இருக்கும்… நீங்களும் மீன் சாப்பிட்டால் ஐஸ்வர்யா ராய் கண்களைப் போன்ற கண்களைப் பெறலாம்' என்று கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.