தொடர்புடைய செய்திகள்
- இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
- 6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!
- இன்று 8 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
- தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் எச்சரிக்கை..!!
- இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தொடர் கனமழை: பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
தொடர் கன மழை காரணமாக பவானி ஆற்றங்கரை வர பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்று வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதை அடுத்து பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
பவானி ஆற்றில் இன்னும் வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே பவானி ஆற்றின் கரையோரம் குடியிருக்கும் பொது மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு மாறிக் கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 கன அடியை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி 4 மதகுகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
