செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 26 ஜூன் 2024 (17:31 IST)

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இன்று இரவு தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் இன்று இரவு நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருப்பூர், விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
Edited by Siva