இது உங்கள் சொத்து… வடிவேலு பாணியில் அரசு பேருந்தை கடத்திய நபர்!

Last Modified திங்கள், 16 நவம்பர் 2020 (10:35 IST)

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தை அஜித் என்ற நபர் கடத்தியுள்ளார்.

கரூரிலிருந்து திருச்சி வந்த அரசு பேருந்து ஒன்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப் பட்டு இருந்தது. அப்போது அந்த பேருந்தின் ஓட்டுனரும் நடத்துனரும் டி குடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அந்த பேருந்தை மர்மநபர் ஒருவர் ஓட்டிச் சென்றுள்ளார். இதுபற்றி உடனடியாக போலிஸரிடம் புகார் கொடுக்க அவர் 2 கிலோ மீட்டர் தூரத்தில் அந்த பேருந்தை மடக்கிப் பிடித்தனர்.மேலும் அந்த பேருந்தை ஓட்டிச்சென்ற இளைஞரான அஜித் என்பவரையும் கைது செய்துள்ளனர். அவர் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியைச் சேர்ந்த அஜித் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பேருந்தை கடத்தும் போது அவர் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்துள்ளது. அவரிடம் இப்போது போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :