’திராவிட இனத்தைச் சேர்ந்தவன்’ - பேசு பொருளான முக ஸ்டாலின் பயோ!

Sugapriya Prakash| Last Updated: வெள்ளி, 7 மே 2021 (12:27 IST)
’திராவிட இனத்தைச் சேர்ந்தவன்’ என முதல்வர் முக ஸ்டாலின் குறிப்பிட்டு இருப்பது சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. 

 
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று முதலமைச்சராக முதன்முறையாக பதவியேற்றார். பதவியேற்பு முடிந்து சென்னை கடற்கரை சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்த உள்ளார்.
 
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் “தமிழகத்தின் முதல்வர்” என்று அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து திமுக தலைவர் என்ற பொறுப்பும் உள்ளது. இதனைத்தொடர்ந்து ’திராவிட இனத்தைச் சேர்ந்தவன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. மேலும் இதே விவரங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :