1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 7 மே 2021 (10:17 IST)

நேரில் வராமல் டிவிட்டரில் வாழ்த்து போட்ட சீமான்!

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்கும் விழா சிறக்க, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து. 

 
திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பு விழாவில் கிட்டத்தட்ட அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அதிமுக சார்பில் முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருமாவளவன், பாஜகவின் சார்பில் இல கணேசன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். 
 
மேலும் காங்கிரஸ் பிரமுகர்கள் கே.எஸ் அழகிரி, தினேஷ் குண்டுராவ், அதேபோல் கூட்டணி கட்சித் தலைவர்களான வைகோ, ஈஸ்வரன், முத்தரசன், பாலகிருஷ்ணன் ஆகியோர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளனர். 
 
கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து கட்சி பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த அழைப்பை ஏற்று அரசியல் கட்சி பிரமுகர்கள் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்கும் விழா சிறக்க, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து சீமான் தனது ட்விட்டரில், சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கப் போகும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அமைச்சரவையினரின் பதவியேற்கும் விழா சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், இவ்விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தமைக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் சீமான் பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.