வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 3 அக்டோபர் 2023 (16:35 IST)

சென்னை கடற்கரை - தாம்பரம் இரவு நேர ரயில் சேவை 15 நாட்களுக்கு ரத்து: ரயில்வே துறை அறிவிப்பு..!

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இரவு நேர ரயில் சேவை நடைபெற்று வரும் நிலையில் அந்த சேவை வரும் 17ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு தினமும் இரவு 11:59 மணிக்கு  மின்சார ரயில் புறப்படும் என்பதும் இந்த ரயிலில் பலர் பயணம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த இரவு நேர ரயில் சேவை அக்டோபர் 17ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
 
சென்னை தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் 17ஆம் தேதிக்கு பிறகு வழக்கம் போல் இரவு நேர ரயில் சேவை தொடரும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.
 
Edited by Siva