ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 2 அக்டோபர் 2023 (07:57 IST)

சென்னை தாம்பரம் - கடற்கரை ரயில் திடீர் நிறுத்தம்.. பயணிகள் அவஸ்தை..!

Chennai electric train
சென்னை தாம்பரம் கடற்கரை மின்சார ரயில் திடீரென நிறுத்தப்பட இருப்பதை அடுத்து பயணிகள் கடும் அவஸ்தை அடைந்து பேருந்துகளில் செல்லும் நிலை ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளன. 
 
தாம்பரம், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதன் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான மின்சார ரயில்கள் இன்று காலை 10:30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் ரயில் சேவை வழக்கம் போல் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று பேருந்துகளில் அதிக கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva