தொடர்புடைய செய்திகள்
- அது போன வாரம்.. இது இந்த வாரம் : அழகிரியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்
- ரஜினிக்கு கூறிய அதே கருத்தை விஷாலுக்கும் கூறிய சீமான்
- மூத்தவர் இருக்கையில் இளையவருக்கு பட்டாபிஷேகமா? டிவிஸ்ட் வைக்கும் தம்பிதுரை
- ஆட்களை வளைக்கும் அழகிரி : செக் வைக்கும் ஸ்டாலின் : களைகட்டும் திமுக அரசியல்
- ஸ்டாலினை தலைவராக ஏற்கிறேன் - அழகிரி அந்தர் பல்டி
திமுகவிடம் காங்கிரஸ் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: அமைச்சர் ஜெயகுமார்
திமுக இரட்டை வேடம் போடுவதால் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய எந்த கூட்டணியில் வேண்டுமானாலும் திமுக சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பாஜகவையும் பிரதமர் மோடியையும் திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்தாலும் இரண்டு கட்சிகளுடனும் நட்புடன் அவர் இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் கூட்டணி் விஷயத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும், எனவே திமுகவுடன் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயகுமார் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார்.
மேலும் எதிர்க்க வேண்டியதை அதிமுக அரசு எதிர்க்கும் என்றும் அதே நேரத்தில் உறவுக்கு கைகொடுக்கும் கட்சியாக அதிமுக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்
அடுத்த கட்டுரையில்
