1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By sinoj
Last Modified: புதன், 14 ஜூலை 2021 (23:54 IST)

மச்சம் பற்றிய பொதுவான தகவல்கள்

இந்த மச்சங்கள் நமது உடம்போடு மரணம் வரை மறையாமல் இருக்கிறது. உடலின் எந்த பாகத்தில், எந்த அளவில் மச்சம் இருந்தால் என்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.
 
நெற்றியில் மச்சம் அமைவது ஞானத்துக்கான அம்சமாக கருதப்படுகிறது. இது ஒரு விசேஷமான நிலை. விரும்பிய வாழ்க்கை அமையும்.
 
பெண்களுக்கு இடது கையில் இருக்கும் மச்சத்தினால் அதிக பாதிப்பும், ஆண்களுக்கு வலது கையில் இருக்கும் மச்சத்தினால் அதிக பாதிப்பும் ஏற்படும்.
 
முகத்தில் பொதுவாக மச்சம் இல்லாமல் இருப்பது நல்லது என்று மச்ச சாஸ்திரம் கூறுகிறது. பொதுவாக உதடு, கண், புருவம், இமைகளுக்கு மேலே மச்சம்  இருக்கக் கூடாது என்று கூறுகிறது.
 
நெற்றிக்கு மேலே தலையில் எல்லாம் மச்சம் இருக்கலாம். ஆனால் முன் தலையில் இருப்பதை விட, பின் தலையில் இருக்கலாம். சிலருக்கு கருப்பையும், பச்சையையும் கலந்த மச்சங்கள் இருக்கும். அது பொதுவாக உடல் பகுதியில் உண்டாகும். அதுபோன்ற மச்சங்கள் உடலின் பின்பகுதியில் ஏற்படுவது நல்லது.
 
வாழவந்த பெண்ணிற்கு வலது பக்கம் மச்சம், ஏறு பிடிக்கிற மச்சானுக்கு இடது பக்கம் மச்சம் என்று ஒரு பழமொழி இருக்கிறது.
 
பொதுவாக ஆண்களுக்கு இடது பக்கம் மச்சம் இருப்பது அதிர்ஷ்டத்தின் வெளிப்பாடு என்று நூல்கள் சொல்கின்றன. பெண்களுக்கு வலது பக்கம் மச்சம் இருப்பதும்  நல்லது. அதேபோல நெஞ்சுப் பகுதியில் மச்சம் இருந்தால் கொஞ்சம் சுகவாசியாக இருப்பார்கள் என்று சொல்லலாம். பொதுவாக பின்புறம் இருக்கும் மச்சத்தால் திடீர் பணப்புழக்கம், அதிர்ஷ்டமாகவும் இருப்பார்கள் என்று சொல்வார்கள்.
 
பொதுவாக கால்களில் மச்சம் இருப்பவர்க ளுக்கு காலில் சக்கரம் என்று சொல்வார்கள். ஒரு சிலர் உட்கார்ந்து கொண்டே காலை ஆட்டிக் கொண்டே இருப்பார்கள்.  அது உள்ளங்காலில் இருக்கும் மச்சத்தின் காரணமாகத்தான் இருக்கும். ஏனெனில் உள்ளங்காலில் இருக்கும் மச்சம் ஒரு அசைவைக் கொடுத்துக் கொண்டே இருக்  கும். ஓடிக் கொண்டே இருப்பார்கள். 
 
எந்த நட்சத்திரக் கூறில் ராகு, கேது, செவ்வாய் எல்லாம் அமைந்திருக்கிறதோ அதன் அடிப்படையில் மச்சத்தின் வடிவம் வேறுபடும். மச்சம் என்றால் மீன் என்றும்  ஒரு அர்த்தம் உண்டு.
 
மீனைப் போன்று இருக்கும் மச்சம் எல்லாம் விசேஷம். உள்ளங்கையில் எல்லாம் மச்ச ரேகை கூட உருவாகும். மச்ச ரேகை உண்டானால் மன்னனாகக் கூட  ஆவார்கள். மீனைப் போன்ற மச்சம் அதிர்ஷ்டத்தின் வெளிப்பாடு. இப்போதெல்லாம் அது அரிதாகிவிட்டது.