1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Bangalore blast..! NIA arrest someone..!!

பெங்களூரு குண்டுவெடிப்பு..! ஒருவரை பிடித்து என்.ஐ.ஏ விசாரணை..!!

Bomb Blast
பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக ஒருவரை கைது செய்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந்தேதி நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
 
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. அறிவித்திருந்தது. மேலும், தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில் பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில், சபீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சபீரை பெல்லாரியில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

 
கைதான சபீர் முக்கிய குற்றவாளி இல்லை என்றும், வெடிகுண்டு வைத்தவருக்கு உதவியவர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது கைதான சபீர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
About Writer
Senthil Velan
அடுத்த கட்டுரையில்
பிரதமர் சொல்லும் பொய்களை நம்ப நாங்கள் என்ன ஏமாளிகளா.? முதல்வர் மு.க ஸ்டாலின்..!!