1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Indian army quit from maldives

மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேறியதா? இந்திய வெளியுறவுத்துறை கூறுவது என்ன?

Maldives President
மே பத்தாம் தேதிக்கு பிறகு இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் இருக்க மாட்டார்கள் என்று மாலத்தீவு அதிபர் கூறியிருந்த நிலையில் இந்திய ராணுவத்தின் ஒரு குழுவினர் நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
மாலத்தீவுக்கு மருத்துவ உதவி மற்றும் மனிதாபிமான சேவைகளுக்காக இந்திய ராணுவ வீரர்கள் சென்ற நிலையில் அவர்களை திரும்ப பெறுமாறு மாலத்தீவு அதிபர் மூயிஸ் இந்திய அரசிடம் சமீபத்தில் கூறியிருந்தார் 
 
இந்தியா மாலத்தீவு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில் மே பத்தாம் தேதிக்குள் மாலத்தீவில் உள்ள இந்திய ராணு ராணுவ வீரர்கள் முற்றிலும் நாடு திரும்ப வேண்டும் என்றும் மூயிஸ் அறிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் மார்ச் 10ஆம் தேதி இந்திய வீரர்களின் முதல் குழு மாலத்தீவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி உள்ளதாக மாலத்தீவில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன. இருப்பினும் இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மே பத்தாம் தேதிக்கு பிறகு மாலத்தீவில் ராணுவ உடையிலோ அல்லது சாதாரண உடையிலோ இந்திய ராணுவத்தினர் இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மூயிஸ் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
சரத்குமார் முதல்வராக முடியாதா? அப்ப அவரது மாமியாரின் கனவு!?