1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2024 (17:18 IST)

இந்தியாவில் உள்ள அலுவலகங்களை காலி செய்யும் பைஜூ நிறுவனம்.. என்ன காரணம்?

byjus
கடும் நிதி நெருக்கடி காரணமாக பெங்களூர் அலுவலகத்தை தவிர இந்தியாவில் உள்ள அனைத்து அலுவலகத்தையும் காலி செய்ய பைஜூ நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
பைஜூ நிறுவனம் நாடு முழுவதும் பல கிளைகளை தொடங்கி மாதம் 10 கோடி ரூபாய் வாடகை மட்டுமே செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்நிறுவனத்தின் வருமானம் பெரும் அளவில் குறைந்துள்ளதால் ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கை எடுத்தது 
 
இதனை அடுத்து 20 ஆயிரம் ஊழியர்களை வெளியேறுமாறு சமீபத்தில் இந்நிறுவனம் தெரிவித்த நிலையில் பெங்களூரில் உள்ள தலைமை அலுவலகம் தவிர நாடு முழுவதும் உள்ள மற்ற அலுவலகங்களை தற்காலிகமாக மூடை நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் இதன் மூலம் வாடகையை மிச்சப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது 
 
இந்நிறுவனம் பெங்களூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து ஆன்லைன் மூலம் மட்டுமே பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு இந்நிறுவனம் 10 கோடி ரூபாய் அளவில் வாடகை செலவு மட்டுமே செய்து வந்த நிலையில் கடும் நிதி நெருக்கடி காரணமாக தற்போது அனைத்து அலுவலகங்களையும் மூட முடிவு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran