வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 13 மார்ச் 2024 (11:40 IST)

நான் எந்தக் கட்சியில் சேரப் போகிறேன் என்பதை தேர்தலுக்குப் பின் அறிவிப்பேன் – சத்யராஜ் மகள் திவ்யா

பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார்.  ’மகிழ்மதி இயக்கம்’ என்ற அமைப்பை ஆரம்பித்து நடத்தி வரும் திவ்யா சத்யராஜ், இந்த இயக்கத்தின் மூலம் ஊட்டச்சத்து குறைந்த மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை அளித்து வருவதாக தெரிவித்தார். தனக்கு அரசியலிலும் ஆர்வம் உள்ளதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவரை பாஜக தங்கள் கட்சியின் சார்பாக கொங்கு மண்டலத்தில் எதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வைக்க அனுகியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதை திவ்யா சத்யராஜ் மறுத்துவிட்டாராம். இதுகுறித்து பேசியுள்ள அவர் “என்னை ஒரு கட்சி அனுகியது உண்மைதான். ஆனால் எந்தவொரு மதத்தையும் போற்று கட்சியிலும் நான் இணைவதில்லை என உறுதியாக இருக்கிறேன்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது தான் ஒரு கட்சியில் சேரப்போவதாகவும், அது எந்த கட்சி என்பதை தேர்தலுக்குப் பின்னர் அறிவிப்பேன் எனவும் கூறியுள்ளார்.   சத்யராஜ் பெரியாரிய ஆதரவாளர் என்பதால் அவரின் மகள் திவ்யா திமுகவில் சேர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.