1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 19 ஏப்ரல் 2023 (19:19 IST)

பல்வீர்சிங் பல்பிடுங்கிய விவகாரம்.. சிபிசிஐடி-க்கு வழக்கு மாற்றம்..!

பல்வீர்சிங் பல்பிடுங்கிய விவகாரம்.. சிபிசிஐடி-க்கு வழக்கு மாற்றம்..!
அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர்சிங் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். 
 
ஏற்கனவே ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் இடைக்கால அறிக்கையில் கொடுக்கப்பட்ட பரிந்துரையின் படி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த இந்த குற்றம் தொடர்புடைய வழக்குகள் அனைத்தையும் சிபிசிஐடிக்கு மாற்றுவதாக காவல்துறை தலைமை இயக்குனர் சற்றுமுன் பத்திரிகைகளுக்கு செய்தி வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் சிபிசிஐடி இந்த வழக்கை விசாரணை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva