செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 ஏப்ரல் 2023 (16:28 IST)

பல் பிடுங்கிய விவகாரம்: ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்ததாக ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது. 
 
இந்த விவகாரம் குறித்து ஐஏஎஸ் அதிகாரி அமுதா என்பவர் விசாரணை செய்து வரும் நிலையில் பல்வீர் சிங் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயுதத்தை பயன்படுத்தி பெரிய காயம் ஏற்படுத்துதல் சித்திரவதை செய்தல் போன்ற குற்றங்களுக்காக இந்திய தண்டனைச் சட்டம் 326 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங் இந்த புகார்கள் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran