1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 17 ஏப்ரல் 2023 (13:39 IST)

பல் பிடுங்கிய சம்பவத்தின் விசாரணை.. உளவுப்பிரிவு காவல்துறையினரை வெளியேற்றிய அமுதா ஐ.ஏ.எஸ்..!

அம்பாசமுத்திரத்தில் பல் புடுங்கிய விவகாரம் குறித்து விசாரணையை ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா நடத்திவரும் நிலையில் காவல்துறையினரை வெளியேற்றி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது குறித்து  புகார் எழுந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்ய ஐஏஎஸ் அதிகாரி அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் இரண்டாம் கட்ட விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் விசாரணை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக காவல் துறையினருக்கு அனுமதியை மறுத்துள்ளார். 
 
வட்டாட்சியர் அலுவலகத்தில் நின்று கொண்டிருந்த உளவுப்பிரிவு காவல் துறையினர்களை வெளியேற்ற அவர் உத்தரவிட்டார். காவல்துறைக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்தில் இருந்தால் விசாரணை பாதிக்கப்படும் என்று ஐஏஎஸ் அதிகாரி அமுதா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். 
 
இதனை அடுத்து விசாரணை நடைபெறும் இடத்தில் காவல்துறை அதிகாரிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva