1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. a raja challenge amitshah to discuss sanathanam

பாஜகவில் எந்த கொம்பனா இருந்தாலும் வாங்க!.. சவால் விட்ட ஆ.ராசா!...

a raja
இந்து மதத்தை நம்பும், போற்றும் எல்லோரும் சனாதத்தை பின்பற்றுபவர்களாகவே கருதப்படுகிறார்கள். எப்போதும் நிலையான மாறாத அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டதுதான் சனாதனம். எப்போதும் மாறாத அடிப்படை தர்மங்கள், கடமைகள், நெறிகள் மற்றும் ஆன்மீக கொள்கைகளை உள்ளடக்கியதுதான் சனாதனம். இந்து மதத்தை அடிப்படையாக வைத்து அரசியல் செய்யும் பாஜக சனாதனத்தை எப்போதும் தூக்கிப் பிடிக்கிறது. ஆனால் திமுக போன்ற கட்சிகள் சனாதனத்தை எதிர்க்கிறது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கழகத் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா போன்றவர்கள் சனாதனத்துக்கு எதிராக எப்பொழுதும் கடுமையாக வால் வீசி வருகிறார்கள். ஒருபக்கம் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தை திருமாவளவனும் சனாதனத்தை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். சனாதானம் மக்களிடையே பிரிவை உண்டாக்குவதாக அவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.

இந்நிலையில் கழகத் துணை பொதுச்செயலாளர் ஆர்.ராசா நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது ‘அமித்ஷாவிற்கு சவால் விடுகிறேன். பாஜகவில் எந்த கொம்பனாக இருந்தாலும் வாருங்கள்.. டெல்லியில் பொதுவெளியில் லட்சம் பேர் கூடும் இடத்தில் சனாதனம் குறித்து விவாதிக்க நான் தயார்.. நீங்கள் தயாரா?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆ.ராசாவின் இந்த சவாலுக்கு பாஜகவினர் விரைவில் எதிர்வினை ஆற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
புதுடெல்லி செல்கிறேன்; எனக்காக அல்ல.. காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் x தளத்தில் பதிவு