1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Awareness program about accident free driving

விபத்தில்லா வாகனம் ஓட்டுவது பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி

விபத்தில்லா வாகனம்
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சுந்தரவடிவேல் அவர்கள் உத்தரவு படி   விபத்தில்லா வாகனம் ஓட்டுவது பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி  கரூர் மனோகரா கார்னர் பகுதியில் நடைபெற்றது. 

இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது  மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது  அதனால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்த மோனோ ஆக்டிங் நடைபெற்றது.  இதில் சுமார் 100 மோட்டார் சைக்கிள்  வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில்   கரூர்  நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்  தேவராஜ், கரூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர்  கார்த்திகேயன்,  போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர்கள் கலந்து கொண்டனர்
 
About Writer
anandakumar
அடுத்த கட்டுரையில்
தாலிபன்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட நிருபர்கள் - பிபிசி நேர்காணலில் பேசியது என்ன? ,