1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (19:27 IST)

அரசுப் பேருந்துகளில் தானியங்கி பயணச்சீட்டு முறை: விரைவில் அறிமுகம்

MTC Buses
அரசு பேருந்துகளில் தானியங்கி பயணச் சீட்டு முறை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
 
அரசு பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை முதல்கட்டமாக சென்னை மதுரை கோவை ஆகிய போக்குவரத்து கழகங்களில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது
 
இதற்கான சர்வதேச ஒப்பந்த புள்ளி போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த தானியங்கி பயணச் சீட்டு முறையை மெட்ரோ ரயில் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.