1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (16:32 IST)

சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்புவதற்காக கூடுதலாக 850 பேருந்துகள்!

தமிழ்நாட்டில் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 850 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.


நாடு முழுவதும் ஆகஸ்டு 15 திங்கட்கிழமை அன்று 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்களும் விடுமுறை விடப்பட்டுள்ளன. ஏற்கனவே சனி, ஞாயிறு விடுமுறை உள்ள நிலையில் திங்கட்கிழமையும் சேர்த்து மொத்தம் 3 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க தொடங்கியுள்ளனர்.

இதனால் சென்னையிலிருந்து செல்லும் அரசு, தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளில் கூட்டம் அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து 1,42,062 பயணிகள் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்புவதற்காக தமிழ்நாட்டில் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 850 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. விடுமுறையையொட்டி பல்வேறு இடங்களுக்கு சென்றவர்கள் திரும்பிவர வசதியாக இன்றும்,நாளையும் சிறப்பு பேருந்து இயங்க உள்ளது. பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.