திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2022 (08:16 IST)

சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா! – சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Sorimuthu Ayyanar Temple
திருநெல்வேலி சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி காரையாறு பகுதியில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலில் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழா மிகவும் பிரபலமான ஒன்றாகும். இந்த திருவிழாவிற்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் மக்கள் பலர் வந்து செல்வர்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆடி அமாவாசை திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருவிழா குறித்த முன்தயாரிப்பு நடவடிக்கைகளில் வனத்துறை மற்றும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, தனியார் வாகனங்கள் காரையாறு செல்ல அனுமதியில்லை. வாகனங்களை அகஸ்தியர்பட்டியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து அரசு பேருந்துகள் மூலமாக மட்டுமே காரையாறு செல்ல முடியும். அதுபோல காரையாறு பகுதிக்குள் பிளாஸ்டிக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் எடுத்து செல்ல அனுமதியில்லை என்று கூறப்பட்டுள்ளது.