தொடர்புடைய செய்திகள்
- கஞ்சா போதை.. பெண்களை வீட்டிற்கே அழைத்து வந்த மகன்.. தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்..!
- சவாரியை ரத்து செய்ததால் இளம்பெண்ணை தாக்கிய ஊபர் டிரைவர்.. என்ன நடந்தது?
- கள்ளக்காதலியின் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர்.. ஆசிரியையால் வெளிவந்த உண்மை..!
- ஆட்டோ டிரைவரை நடுரோட்டில் செருப்பால் அடித்த மநீம பெண் பிரபலம்! - என்ன நடந்தது?
- 200 முறை கால் செய்தும் பதிலில்லை.. ஆட்டோ டிரைவரின் மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்..!
உயிர் போகும்போதும் குழந்தைகளை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுனர்!.. சென்னையில் சோகம்!..
auto driver
லாரி, பேருந்து, கார், ஆட்டோ ஆகியவற்றை ஓட்டும் ஓட்டுநர்கள் வண்டியை ஒட்டிக் கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த சம்பவம் அப்போது நடந்து வருகிறது. அதில் சில ஓட்டுனர்கள் மட்டும்தான் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் போது நெஞ்சுவலி வந்தால் வாகனத்தை ஓரமாக நிறுத்தி விடுவார்கள்.
அப்படி பல ஓட்டுனர்கள் வண்டியை ஓரமாக நிறுத்தி வண்டியில் வாகனத்தில் இருக்கும் பயணிகளை காப்பாற்றி இருக்கிறார்கள். இதுபோன்ற பல சம்பவங்கள் செய்திகளாக வெளிவந்திருக்கிறது. அந்த வகையில் அதுபோன்ற ஒரு சம்பவம் இன்று சென்னையில் நடந்திருக்கிறது.
சென்னை அண்ணா நகரில் குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றி சென்ற முருகன்(40) என்கிற ஆட்டோ ஓட்டுநர் குழந்தைகளை ஆட்டோவில் அழைத்து சென்று கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. ஆனாலும் சமாளித்து ஆட்டோவை சாலை ஒரு பத்திரமாக நிறுத்திவிட்டு மயங்கி சரிந்திருக்கிறார்.
