தொடர்புடைய செய்திகள்
- 1000க்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸாகும் விஜய் ஆண்டனியின் ‘கொலை’ திரைப்படம்!
- எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு...
- சூர்யா பிறந்தநாளில் ''கங்குவா' பட கிளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ்! புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்த படக்குழு
- சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் பழ வியாபாரிக்கு அரிவாள் வெட்டு.. பரிதாப மரணம்..
- பாம்பை கடிக்க வைத்து தொழிலதிபர் கொலை: ரகசிய தொடர்பில் இருந்த பெண் காரணமா?
நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்.. தட்டிக்கேட்ட ஆட்டோ டிரைவர் கொலை..!
சென்னையில் நடு ரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் செய்ததை தட்டி கேட்டு ஆட்டோ டிரைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு பகுதியில் அஜய் என்பவரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து நடுரோட்டில் கேக் வெட்டி கொண்டாடினார்.
இந்த நிலையில் அந்த வழியாக ஆட்டோவில் வந்த காமேஷ் என்பவர் நடு ரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினால் எப்படி ஆட்டோ செல்வது என்று கூறியுள்ளார்
இதனிடையே அவருக்கும் அஜய் மற்றும் அவரது நண்பர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் அஜய் நண்பர்கள் கொடூரமாக ஆட்டோ டிரைவரை தாக்கியதாகவும் இதில் சம்பவ இடத்திலேயே காமேஷ் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அஜய் மற்றும் அவருடைய நண்பர்கள் தலைவராகி உள்ள நிலையில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
