புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 20 ஜூலை 2023 (12:47 IST)

சூர்யா பிறந்தநாளில் ''கங்குவா' பட கிளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ்! புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்த படக்குழு

kanguva
நடிகர் சூர்யாவின் ''கங்குவா'' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் தற்போது சிறுத்தை சிவா  இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில்  நடித்து  வருகிறார்.  வித்தியாசமான கதை பின்னணியுடன் இப்படம் அமைந்துள்ளதால் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.  தமிழ் சினிமாவில் பிரமாண்ட பஜெட்டில்,  3டி தொழில்நுட்பம் மற்றும் 10 மொழிகளில்  இப்படம் உருவாகி வருகிறது.

இந்த   நிலையில், கங்குவா படத்தை தயாரித்து வரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ பற்றிய அறிவிப்பு  நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்தது.

இன்று காலை இந்த அறிவிப்பு வெளியானது. அதில், வரும் ஜூலை 23 ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக வாய்ப்புள்ளதாக  வெளியான தகவலை உறுதி செய்துள்ளது.

அதன்படி, இன்று இப்படத் தயாரிப்பு நிறுவனம், சூர்யாவின் புதிய போஸ்டரை ரிலீஸ் செய்து, அதில், வரும் 23 ஆம் தேதி கங்குவா #GlimpseOfKanguva கிங் அரைவ்ஸ் என்று தெரிவித்துள்ளனர்.  இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், இப்படத்தில் வில்லனாக நடிகர் நட்டி நடராஜ் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

தனுஷின் கர்ணன் படத்தைத் தொடர்ந்து நட்டி நடராஜ் இப்படத்திலும் வில்லனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.