வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 21 ஜூலை 2023 (07:39 IST)

1000க்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸாகும் விஜய் ஆண்டனியின் ‘கொலை’ திரைப்படம்!

இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ள கொலை திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் பாலாஜி இதற்கு முன் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான விடியும் முன் என்ற திரைப்படத்தை இயக்கியவர். பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிந்தாலும் சில பல காரணங்களால் ரிலீஸ் தாமதமாகி வந்தது.

இந்நிலையில் இன்று இந்த படம் இன்று 1000க்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸ் ஆகிறது. கொலை படத்தை தமிழ்நாட்டில் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது. தமிழ்நாட்டில் 300க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தமிழகத்தைப் போன்றே ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் விஜய் ஆண்டனிக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் அங்கும் 300 க்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸ் ஆகிறதாம். அதுபோல இந்தியாவின் மேலும் பல இடங்களில் 400க்கும் மேற்பட்ட திரைகளில் என ஒட்டுமொத்தமாக 1000க்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸாகிறது என சொல்லப்படுகிறது.