1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 ஜூன் 2022 (18:10 IST)

விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டருக்கு நிபந்தனை ஜாமீன்

supreme court
விசா முறைகேடு வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்த கார்த்தி சிதம்பரத்தின் ஆஇட்டருக்கு ஜாமீன் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
சீன நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக விசா பெற்றுத் தந்ததாகவும் அதற்காக லஞ்சம் வாங்கியதாகவும் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது
 
இதில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமன் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்தநிலையில் ஆடிட்டர் பாஸ்கரனுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார் 
 
இந்த உத்தரவில் இரண்டு லட்ச ரூபாய் பிணைத்தொகை செலுத்தவும், சிபிஐ விசாரணைக்கு ஆடிட்டர் பாஸ்கரன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது