திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 18 மே 2022 (10:00 IST)

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது : சிபிஐ அதிரடி நடவடிக்கை

Karthi
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரன் ராமன் என்பவர் திடீரென சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நேற்று கார்த்தி சிதம்பரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இவர்களின் வீடுகளில் சிபிஐ அதிரடியாக சோதனை நடத்தியது 
 
250க்கும் மேற்பட்ட சீனர்களுக்கு முறைகேடாக லஞ்சம் வாங்கிக்கொண்டு விசா வாங்கி கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கையாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைதுசெய்யப்பட்டுள்ளார் 
 
இந்த கைது நடவடிக்கையை அடுத்து வேறு சில கைது நடவடிக்கையும் இருக்கும் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது