நிலத்தடி நீரினை அதிகப்படுத்தமுயற்சி
ஊரடங்கில் 100 நாள் திட்டத்தில் புதிய முயற்சிக்காக விளைநிலத்தை பணிக்கு வழங்கியவருக்கு பாராட்டு.
ஊரடங்கு காலத்தில், 100 நாள் வேலை திட்ட பணியாளருக்கு வேலை வழங்கும் விதமாக விளைநிலத்தை வழங்கியவருக்கு, பஞ்., சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கரூர் ஒன்றியம், காதப்பாறையில், 1,586 பேர், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் அடையாள அட்டை பெற்றுள்ளனர். ஊரடங்கால், வேலைக்கு வருபர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு, தொடர்ந்து வேலை அளிக்கும் விதமாக, விவசாய பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதற்கு, தங்களின் நிலத்தை பதிவு செய்ய பலர் தயக்கம் காட்டி வருகின்றனர். அவர்களின் தவறான எண்ணத்தை போக்கும் வகையில், 100 நாட்கள் பணியாளர்கள் முன்னிலையில், பஞ்., நிர்வாகம் சார்பில் விவசாய பணிக்கு நிலம் அளித்த விவசாயி கவுரவப்படுத்தப்பட்டார்.
கரூர்மாவட்டம், கரூர்ஊராட்சிஒன்றியத்திற்குட்பட்ட காதப்பாறையில், நீர் நிலைகள் குறைவு என்பதால், விளைநிலங்களில் பண்ணை குட்டை வெட்டுதல், மண் வரப்பை உயர்த்துதல், தென்னை மரத்தை சுற்றி குழி பறித்தல், மரம் நடுதல் போன்ற விவசாய பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அதன்படி, 22.5 ஏக்கர் நிலத்தில் விவசாய பணி செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும், திட்டத்தில் விவசாய பணிக்கு பதிவு செய்ய சிட்டா அடங்கல் போன்ற ஆவணங்கள் தேவைப்படுகிறது. அவற்றை பதிவு செய்தால், அரசு நிலத்தை பிடுங்கி கொள்ளும் போன்ற வதந்திகள் பரவியுள்ளன. ஆகையால், நிலத்தில் பணிகளை செய்ய பலர் பதிவு செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். 'நீங்கள் பதிவு செய்தால் மட்டுமே, 100 நாள் பணியாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க முடியும்' என, விளக்கம் அளித்து வருகிறோம். அதன்படி, அருகம்பாளையத்தில், இரு ஏக்கர் வயலில், நான்கு அடி அகலம், 1.5 அடி உயரத்துக்கு மண்வரப்பு உயர்த்தப்படுகிறது. இதனால், மழை பெய்யும்போது தண்ணீர் வீணாகாமல் வரப்புக்குள்ளேயே தேங்கி நிற்கும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும். கொரோனா காலத்தில், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு பணி செய்ய வாய்ப்பு வழங்கிய, நிலத்தின் உரிமையாளர் பெருமாளும் கவுரவிக்கப்பட்டார். மேலும், அந்த 100 நாள்பணியாளர்கள்வேலைக்கு வரும்போது ஒவ்வொருநாளும் முககவசம் அணிந்துவருவதோடு, தெர்மல்ஸ்கேனர் உபயோகித்துவிட்டு தான்வேலைக்கு அனுமதிப்பர் என்றார்.