திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 1 ஆகஸ்ட் 2020 (11:05 IST)

மூன்று முதல்வர்களுக்கு கார் ஓட்டியவர் மர்ம மரணம் – சேலத்தில் பரபரப்பு!

தமிழக முன்னாள் முதல்வர்களான எம் ஜி ஆர், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா அகியோருக்கு கார் ஓட்டுனராக இருந்த குமாரசாமி என்பவர் சேலத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் டெல்லி தமிழ்நாடு அரசு இல்லத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்தவர் குமாரசாமி. அரசு அலுவல் காரணமாக டெல்லிக்கு தமிழக முதல்வர்கள் செல்லும் போது அவர்களுக்கு ஓட்டுனராக பணியாற்றியவர் குமாரசாமி. அந்தவகையில் அவர் எம் ஜி ஆர், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு காரோட்டியாகப் பணியாற்றியுள்ளார்.

அதன் பின் பணி ஓய்வு பெற்ற குமாரசாமி, தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் வீட்டை விட்டுச் சென்ற அவர் மீண்டும் திரும்பவே இல்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் புகார் அளிக்க போலிஸார் நடத்திய தேடுதலில் வாழப்பாடி அருகே கிணற்றில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது சம்மந்தமாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த குமாரசாமிக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.