திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (11:38 IST)

வெல்டிங் மெஷினால் ஏடிஎம் உடைப்பு…. ராணிப்பேட்டையில் நடந்த கொள்ளை!

கோப்புப் படம்

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் வெல்டிங் மெஷினால் ஏடிஎம் எந்திரம் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை பெருங்களத்தூர் ஜி ஆர் டி கல்லூரியில் ஆக்ஸீஸ் வங்கி ஏடிஎம் இருந்துள்ளது. அதில் சில தினங்களுக்கு முன்னர் 8.5 லட்சம் பணம் போடப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்துக்குள் இருந்த அந்த எந்திரம் வெல்டிங் மெஷினால் உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக சிசிடிவி கேமரா காட்சிகளின் மூலம் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.