ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (11:09 IST)

மாணவர்கள் கணக்கில் 960 கோடி பணம்… அதிர்ச்சி தகவல்!

பீஹார் மாநிலத்தில் பள்ளி மாணவர்களின் வங்கிக்கணக்கில் சுமார் 900 கோடி ரூபாய் பணம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீஹார் மாநிலத்தில் உள்ள பள்ளிமாணவர்களான குரு சரன் விஸ்வாஸ் மற்றும்  ஆஷிஷ் அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களுக்கு பள்ளியில் சார்பில் கிராமின் வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதுபோல மாணவர்களுக்காக உருவாக்கப்படும் கணக்கில் சீருடை மற்றும் கல்வி சார்ந்த பொருட்கள் வாங்குவதற்காக இந்த வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி வருகிறது.

இதையடுத்து அவர்கள் இருவரும் தங்கள் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என சோதித்த போது இருவரின் கணக்குகளிலும் சேர்த்து சுமார் 906 கோடி ரூபாய் பணம் இருப்பதாகக் காட்டியுள்ளது. இதைப்பார்த்து மாணவர்களும் வங்கி ஊழியர்களும் அதிர்ச்சி அடையவே இது சம்மந்தமாக மேலாளர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

பின்னர் கணினியில் நடந்த கோளாறால் இந்த தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.