திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 4 ஜூலை 2019 (17:56 IST)

ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள்- அத்திவரதரை தரிசிக்க நேரம் நீட்டிப்பு

காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் 40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கில் மக்கள் நாள்தோறும் வந்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் பயங்கரமான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 1ம் தேதி தொடங்கிய அத்திவரதர் தரிசன் ஆகஸ்டு 17 வரை நடைபெறுகிறது. அத்திவரதரை தரிசிக்க அதிகாலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், பிறகு பிற்பகல் 3 மணியிலிருந்து இரவு எட்டு மணி வரையிலும் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று கட்டுக்கடங்காதா கூட்டமாய் மக்கள் அத்திவரதரை தரிசிக்க வந்தனர். 12 மணிக்கு நடை சாத்தப்பட்டாலும் வரிசையிலேயே 3 மணி வரைக்கும் நிற்கிறார்கள். மேலும் பல மாநிலங்களிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி மக்கள் வந்தபடி உள்ளனர்.

இதனால் இன்று முதல் அத்திவரதர் தரிசனம் அதிகாலை 5 மணியிலிருந்து இரவு 9 மணிவரை தொடர்ந்து நடைபெறும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னைய்யா அறிவித்துள்ளார். இதனால் மக்கள் எந்தவித தடைகளுமின்றி அத்திவரதரை மகிழ்ச்சியோடு தரிசித்து வருகின்றனர்.