செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 3 ஜூலை 2019 (20:55 IST)

வரதராஜ பெருமாள் கழுத்தில் வெள்ளையன் அணிந்த மகர கண்டியா?- சர்ச்சையை கிளப்பும் தகவல்

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் கருவறையில் இருக்கும் வரதராஜர் கழுத்தில் இருக்கும் மகர கண்டி என்ற ஆபரணம் வெள்ளைக்காரர் இராபர்ட் க்ளைவ் கொள்ளையடித்து கொண்டு வந்தது என்னும் செய்தி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

1751ல் ஆற்காடு நவாப்புக்கும், இராபர்ட் க்ளைவின் படைகளுக்கும் இடையே நடந்த போரில் இராபர்ட் க்ளைவ் வெற்றிபெற்றார். அங்குள்ள செல்வங்களை சூறையாடிக்கொண்டு அவர் மதராஸ் நோக்கி முன்னேறினார். அப்போது காஞ்சிபுரம் அருகே க்ளைவின் படைகள் நெருங்கும் போது பலமாக மழைபெய்ய தொடங்கியது. இதனால் க்ளைவின் படைகள் வரதராஜ பெருமாள் கோவிலின் அருகே ஒதுங்கினார்கள். இரவு முழுவதும் விடாமல் பெய்த மழையால் க்ளைவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. க்ளைவின் படையில் இருந்த வீரன் ஒருவன் வரதராஜ பெருமாள் கோவில் துளசி தீர்த்தத்தை அவருக்கு அளித்திருக்கிறான். காலை எழுந்ததும் பூரண குணமடைந்திருந்த க்ளைவ் தான் கொள்ளையடித்து வந்தவற்றில் இருந்த மகர கண்டியை வரதராஜ பெருமாளுக்கு அணிந்துவிட்டு வணங்கி சென்றான். இப்போது வரை அந்த மகரகண்டிதான் பெருமாள் கழுத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

இப்படியாக முடிகிறது அந்த கதை. ஆனால் உண்மையில் வரதராஜர் கழுத்தில் இருக்கும் மகரக்கண்டி பெயர் “க்ளைவ் மகரக்கண்டி”தான். ஆனால் அதை க்ளைவ் வரதராஜரின் கருட சேவையை பார்க்க வந்தபோது அணிவித்ததாகவே பதிவேடுகளில் இருக்கிறது. க்ளைவ் இந்த மகர கண்டியை பரிசளித்ததால்தான் வரதராஜர் க்ளைவ்க்கு ஆசி வழங்கி இந்தியாவையே அளித்தார் என்று பலரும் வீணான வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

க்ளைவ் மட்டுமல்ல அன்றைய பல வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் உள்ள பல கோவில்களுக்கும் ஆபரணங்களை பரிசளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.