1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 27 ஜூன் 2024 (14:02 IST)

இந்தி கற்று கொள்வது நல்லது: தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன்..!

தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு என்பது கடந்த 50 ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பதும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக் வைரலானது என்பது தெரிந்தது. 
 
இந்தியை படிக்கக்கூடாது என்று சொல்லும் அரசியல்வாதிகள் தங்கள் குழந்தைகளை ஹிந்தி படிக்க வைக்கிறார்கள் என்றும் ஆனால் ஏழை எளிய மக்களை மட்டும் ஹிந்தி படிக்க அனுமதி இல்லை என்றும் சில அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன. 
 
இருப்பினும் இந்தி எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டில் உள்ள பலருக்கு ரத்தத்திலேயே ஊறியுள்ள நிலையில் தமிழக கிரிக்கெட் விளையாட்டு வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தி கற்றுக்கொள்வது நல்லது என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்தி தெரியாது என்பதை இந்தி தெரியாது போடா என்று குறிப்பிடலாம். ஆனால் நாம் என்று எனக்கு இந்தி தெரியாது, கொஞ்சம் கற்றுக்கொள்ளவில்லை என்றால் கஷ்டம் என்று சொல்கிறோமோ, அன்று நமக்கு நல்லது என்று கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran