1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 4 செப்டம்பர் 2023 (20:37 IST)

5வது மாடியில் ...ஜன்னல் கம்பியில் சிக்கிய குழந்தையை மீட்ட இளைஞர்கள்

china
சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஜன்னல் கம்பியில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குழந்தை ஒன்றை  இளைஞர்கள் துணிச்சலாக மீட்ட சம்பவம் நடந்துள்ளது.

சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஜன்னல் கம்பியில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குழந்தை ஒன்றை  இளைஞர்கள் துணிச்சலாக மீட்ட சம்பவம் நடந்துள்ளது.

சீன நாட்டிலுள்ள ஒரு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் 5 வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை ஒன்று ஜன்னல் கம்பியில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் வசிப்போர். இதுபற்றி அங்குள்ள இளைஞர்களிடம் கூறினர்.

எனவே, இளைஞர்கள் சிலர் திட்டமிட்டு, துணிச்சலுடன் போராடி, குழந்தையின் உயிரைக் காப்பாற்றினர்.

தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் செயல்பட்டு, குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.