வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 14 ஜூலை 2018 (07:59 IST)

கோவை மாணவி உயிரிழந்த விவகாரம்: பயிற்சியாளர் சான்றிதழ் வழங்கியவர் கைது

கோவையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது மரணம் அடைந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாணவிக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவர் போலி பயிற்சியாளர் என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த விசாரணையில் அவரது பயிற்சியாளர் சான்றிதழும் போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து மாணவி உயிரிழப்புக்கு  காரணமான பயிற்சியாளருக்கு  போலி சான்றிதழ் தயாரிக்க  உதவிய அசோக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்தான் பணம் வாங்கி கொண்டு போலியாக பயிற்சியாளர் சான்றிதழ் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அசோக்கிடம் போலீசார் தீவிர விசாரணை செய்தால் இன்னும் ஆறுமுகம் போல் எத்தனை பேருக்கு அவர் போலி பயிற்சியாளர் சான்றிதழ் வழங்கியுள்ளார் என்பது  தெரியவரும்
 
ஆறுமுகம், அசோக் உள்பட இதுவரை இந்த விவகாரத்தில் மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை இன்னும் தீவிரமாக நடைபெற்று வருவதால் கைது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.