தொடர்புடைய செய்திகள்
- சூடுபிடிக்கும் ஜெ. மரண விசாரணை: பொறுப்பேற்றார் ஆறுமுகசாமி!
- ஜெ.வின் மரணம் ; நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்
- ஆர்.கே.நகரில் ஒரே நாளில் தாக்கலான 101 வேட்புமனுக்கள்
- தொப்பி வாங்கிய தினகரன்; சின்னம் கேட்டு தொடந்த வழக்கு தள்ளுபடி
- விஷாலுக்கு கடும் எதிர்ப்பு : உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கினார் சேரன்
ஜெ.வின் மரணம் தொடர்பான விசாரணை : தீபா, மாதவனுக்கு சம்மன்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி, இது தொடர்பாக 60 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளார்.
இதுபற்றி விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஏற்கெனவே திமுகவை சேர்ந்த மருத்துவர் சரவணன், ஜெயலலிதா சிகிச்சையின் போது தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட மருத்துவக்குழுவில் இருந்த மருத்துவர்களான நாராயணபாபு, விமலா ஆகியோரிடமும் விசாரணை நடத்தினார்.
அந்நிலையில், ஜெ.வின் மரணம் தொடர்பாக 60 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 27 பேர் நேரில் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதில் தீபா, மாதவன் உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதில், மாதவன் இன்று நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை கூறுவார் எனத் தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்
