திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By VM
Last Updated : வெள்ளி, 5 அக்டோபர் 2018 (18:16 IST)

'திருட்டு கதை சர்க்கார்' உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் புகார்

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'சர்க்கார்'. சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ள  இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர்   2 ஆம்தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில் உதவி இயக்குநர் வருண் *என்பவர்* தென்னிந்திய திரைப்படஎழுத்தாளர்கள் சங்கத்தில், சர்கார் படத்தின் கதை தன்னுடையது என புகார்அளித்தார்.''செங்கோல்' என்று தலைப்பிடப்பட்ட ஒரு கதையை 2007 ஆண்டு  தான், தென்னிந்தியதிரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்ததாகவும், அதை திருடி ஏஆர்முருகதாஸ் சர்கார் படத்தை எடுத்திருப்பதாகவும் தனது புகாரில் கூறியுள்ளார்.இந்த புகார் குறித்து எழுத்தாளர் சங்கத்தில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.