புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 5 அக்டோபர் 2018 (20:32 IST)

மீண்டும் கருத்து சொல்லி விஜய் படத்தை ஓட வைக்க விரும்பவில்லை: தமிழிசை

மீண்டும் கருத்து தெரிவித்து விஜய் படத்தை ஓட வைக்க விரும்பவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சர்க்கார் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்  முதல்வரானால் நடிக்கமாட்டேன் என்று பேசியது   பெரிய வைரல் ஆகியுள்ளது. அவரது அரசியல் பேச்சுக்குபல அரசியல்வாதிகள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
 
தமிழக பாஜக தலைவர் தமிழிசை அளித்த பேட்டியில்,  'இப்போது எல்லோரும் அரசியல்குறித்து பேச ஆரம்பித்துவிட்டார்கள். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.அதில் தவறில்லை.சினிமாவில் இருந்து வந்தவர்கள் மட்டும்தான் ஆட்சி அமைக்கிறார்கள் என்று கூறுவது தவறு. முதல்வராக இருந்தவர்களெல்லாம் நடித்தார்கள் என்பது போல் விஜய் பேசி உள்ளார். இதை ஏற்க முடியாது.
அரசியல்வாதிகளுக்கு அறிவே இல்லை. அவர்களுக்கு எதுவுமே தெரியாது என்பது போல இவர்கள் பேசுகிறார்கள். எங்களுக்கும் எல்லாம் தெரியும். தமிழகத்தில் எல்லாஅரசியல்வாதிகளும் திறமையானவர்கள்தான். முன்பு சினிமா கேமரா முன்பு பேசினார்கள். இப்போது மீடியா கேமரா முன் விஜய் போன்றவர்கள் பேசுகிறார்கள்.
 
தமிழக அரசியல்வாதிகள் எல்லோரும் நல்லது செய்து இருக்கிறார்கள். இதுவரை இருந்ததமிழக முதல்வர்கள் நல்லதே செய்து ஆட்சி நடத்தி உள்ளனர். இனிதான் விஜய் போன்றஒருவர் சினிமாவில் இருந்து நல்லது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவரது படம்வெளியாக இருக்கிறது. இந்த நேரத்தில் அவரை பற்றி நாங்கள் பேசி, அவரது படத்தை ஓடவைக்க விரும்பவில்லை' இவ்வாறு தமிழிசை கூறினார்.