1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (16:18 IST)

’’ மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் நேரம் அதிகரிப்பு ’’... அமைச்சர் செங்கோட்டையன் !

’’ மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் நேரம் அதிகரிப்பு ’’... அமைச்சர் செங்கோட்டையன் !

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான  நேரம் இரண்டரை மணி நேரத்தில் இருந்து மூன்று மணிநேரமாக உயர்த்தி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
 
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சாலை அருகேயுள்ள முதலிபாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசுப் பள்ளிக் கட்டிடத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்தார்.
 
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 மணி முதல் பிற்பகல் 1.15 வரை பொதுத்தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்தார்.
 
மேலும், 15 நிமிடம் வினாத்தாளை படிப்பதற்காகவும், 3 மணிநேரம் என்பது மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.