”அதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை” திருமா குற்றச்சாட்டு
அதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதால் தான் மறைமுக தேர்தலை நடத்துகிறது என விடுதலை சிறுத்தை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்
உள்ளாட்சி தேர்தல் நெறுங்கி கொண்டிருக்கும் வேளையில், மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதாவது இம்மூவரையும் மக்கள் தேர்ந்தெடுக்கமுடியாது, வார்டு கவுன்சிலர்களே தேர்ந்தெடுப்பார்கள்.
இந்நிலையில் இது குறித்து வைகோ, முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தொல்.திருமாவளவன் மக்கள் செல்வாக்கு இல்லாததால் தான் மறைமுக தேர்தலை நடத்துகிறார்கள். இது ஜனநாயக விரோத செயல்களுக்கு வழிவகுக்கும் என கூறியுள்ளார்.
பாஜக ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறது என திருமாவளவன் பல மேடைகளில் கூறிவரும் நிலையில் பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுகவின் இந்த முடிவு ஜனநாயக விரோத செயல்களுக்கு வழிவகுக்கும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.