திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2024 (11:22 IST)

ரிசர்வேஷன்ல வரவங்க லஞ்சம் வாங்குறாங்க..? கஸ்தூரி சர்ச்சை பேச்சு! - நெட்டிசன்கள் கடும் கண்டனம்!

சமீபத்தில் இந்து மக்கள் கட்சி கூட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில், தற்போது தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

நேற்று முன் தினம் இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கர்கள் குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி விளக்கம் அளித்த நடிகை கஸ்தூரி, தான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவறாக பேசவில்லை என்றும், அவர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்றுதான் பேசினேன் என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

 

இந்நிலையில் நேற்று தனியார் செய்தி தொலைக்காட்சியில் நடந்த விவாதம் ஒன்றில் பேசிய அவர், இடஒதுக்கீட்டின் மூலம் அரசு பணிகளில் வந்தவர்கள் லஞ்சம் வாங்கி நாட்டை கெடுத்துவிட்டதாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் அவ்வாறு தவறாக சித்தரிப்பதை ஏற்க முடியாது என விவாத நெறியாளர் மறுத்ததால், நடிகை கஸ்தூரி விவாத நிகழ்ச்சி முடியும் முன்னரே அங்கிருந்து புறப்பட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், கஸ்தூரியின் இந்த கருத்திற்கு கடும் கண்டனங்களும் வலுத்து வருகின்றன.

 

Edit by Prasanth.K