திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 ஜூலை 2024 (08:59 IST)

என் தொகுதிக்கு வந்தா.. ராகுல்காந்தியை பூட்டி வைத்து அடிப்பேன்! - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

Rahul Gandhi

சமீபத்தில் ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் இந்துக்கள் குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், ராகுல்காந்தியை பூட்டி வைத்து அறைய வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் அதில் பேசிய ராகுல்காந்தி இந்துக்கள் குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அவரை பாஜகவினரும், இந்து அமைப்பினரும் தொடர்ந்து கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராகுல்காந்தி குறித்து பேசிய கர்நாடக மாநிலம் மங்களூரு தொகுதி பாஜக எம்.எல்.ஏ பரத் ஷெட்டி, நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தியை பாராளுமன்றத்தில் பூட்டி வைத்து கன்னத்தில் அறைய வேண்டும் என பேசியுள்ளார். ராகுல்காந்தி தனது மங்களூர் தொகுதிக்குள் வந்தாலும் அவருக்கு அதே கதிதான் என எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார்.
 

மேலும் அவர் இந்து மதத்தையும், கோவில்களையும் பாதுகாக்க பாஜக முயன்று வருவதாகவும், ஆனால் காங்கிரஸ் இந்து மதமும், இந்துத்துவாவும் வேறு வேறு என சொல்லி வருவதால் வருங்காலத்தில் இந்துக்கள் ஆபத்தை சந்திக்க நேரிடும் என்றும் பேசியுள்ளார்.

ராகுல்காந்தி குறித்து மிரட்டும் வகையில் பேசிய பாஜக எம்.எல்.ஏ பரத் ஷெட்டி மீது காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Edit by Prasanth.K